60 வயது விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம்-கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
60 வயது பூர்த்தியடைந்த விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் மான்தன் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் பெறலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
வேளாண்மை பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வரும் சிறு, குறு பிரிவு விவசாயிகளுக்கு அவர்களின் முதுமை காலத்தில் சமூக வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தந்து சுயமதிப்புடன் வாழ வழிவகை செய்யும் பொருட்டு பிரதம மந்திரி கிசான் மான்தன் திட்டம் இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. முதுமையில் வேலை செய்ய இயலாதபோது அவர்கள் சேமித்த தொகையானது, மத்திய அரசின் பங்களிப்போடு மாதந்தோறும் ஓய்வூதியமாக வாழ்நாள் வரை திரும்ப கிடைக்கும். இத்திட்டத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஓய்வூதிய நிதி மேலாளராக இருந்து ஓய்வூதியம் வழங்கும் பணியினை மேற்கொள்ளும்.
இத்திட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள 18 முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் தங்களை பதிவுசெய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் வயதிற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை தொகை செலுத்தி பொது சேவைமையம் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்கள் 60 வயது அடையும் வரை இத்தொகையினை மாதந்தோறும் அல்லது 3 மாதம் அல்லது 6 மாதம் அல்லது ஒரு வருடம் என விவசாயிகள் வசதிக்கேற்ப வங்கிக்கணக்கு மூலம் இத்தொகையினை செலுத்தலாம்். அதற்கு நிகரான தொகையை மத்திய அரசு விவசாயி கணக்கில் செலுத்தும்.
60 வயது பூர்த்தி அடைந்த பின் இக்கணக்கிலிருந்து ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதும் ரூ.3 ஆயிரம் மாதந்தோறும் வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி என இருவரும் இந்த ஓய்வூதிய திட்டத்தில் தனித்தனியாக இணைந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சந்தா தொகை செலுத்திய விவசாயி ஒருவர் விரும்பினால் இத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளலாம். அன்றைய தேதி வரை அவர் செலுத்திய தொகை முழுவதும் உரிய சேமிப்புக்கணக்கில் வட்டியுடன் திரும்ப வழங்கப்படும்.
இத்திட்டம் முதிர்ச்சியடையும் காலத்திற்கு முன் எதிர்பாராதவிதமாக விவசாயி இறக்கும் பட்சத்தில் அவரின் மனைவி இத்திட்டத்தில் சந்தாதாரராக இல்லாத பட்சத்தில் அவரது விருப்பத்தின் அடிப்படையில்் தொடரலாம். அவ்வாறு தொடர விருப்பம் இல்லையெனில் விவசாயி அதுவரை கட்டிய தொகை சந்தாதாரரின் மனைவிக்கு அல்லது மனைவி இல்லாத பட்சத்தில் சந்தாரரின் வாரிசுக்கு வட்டியுடன் திரும்ப அளிக்கப்படும்.
மேலும் விவசாயி இத்திட்ட காலத்திற்கு பிறகு இறக்கும்பட்சத்தில் அவரின் மனைவி அல்லது வாரிசுதாரருக்கு திட்ட ஓய்வூதிய பலனில் 50 சதவீதம் அதாவது மாதம் ரூ.1,500 வீதம் அவரின் இறுதிக்காலம் வரை கிடைக்கும். இத்திட்டத்தில் தகுதியான சிறு, குறு விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு மற்றும் வாரிசுதாரரின் ஆதார் அட்டை விவரங்களை கொண்டு இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம். எனவே சிறு, குறு விவசாயிகள் இத்திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது முதுமை காலத்தின் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

Related Tags :
Next Story