லத்தேரி, செஞ்சி அரசு பள்ளிகளில்,மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி - ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்
லத்தேரி, செஞ்சி அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்
குடியாத்தம்,
கே.வி.குப்பம் ஒன்றியம் லத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் குப்பன், மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் கே.எம்.ஐ.சீனிவாசன், கூட்டுறவு சங்க தலைவர்கள் டி.கோபி, ரோஸ்மேரி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் எல்.எம்.பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தலைமைஆசிரியர்கள் சந்திரசேகர், ராஜேந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.
சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜி.லோகநாதன் கலந்து கொண்டு லத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 159 மாணவர்களுக்கும், செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 74 மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் சொக்கலிங்கம், பெரியசாமி, ரவிக்குமார் உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story