மாவட்ட செய்திகள்

நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Against the Consumer Marketing Corporation Case To continue Rs.10,000 fine

நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,

மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த வேதசங்கரநாராயணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் 32 மண்டலங்களில் நெல், அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பல உணவுப்பொருட்களை 1.9.2019 முதல் 31.8.2021 வரை வாகனங்களில் கொண்டு செல்வதற்கான டெண்டர் அறிவிப்பு நிர்வாக இயக்குனரால் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்த டெண்டரில் பங்கேற்க விரும்பும் தகுதியுள்ள ஒப்பந்ததாரர் இந்த மாதம் 7-ந்தேதி முதல் 13-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. டெண்டர் விதிப்படி அறிவிக்கப்பட்டது முதல் விண்ணப்பிப்பது வரையில் 30 நாள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்பது விதி.

இந்த விதியை பின்பற்றாமல் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் என்னை போன்ற பலர் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த டெண்டர் அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். உரிய அவகாசம் அளித்து புதிதாக டெண்டர் அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “டெண்டர் பணிகள் முடிந்துவிட்டன. மிகவும் காலதாமதமாக இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது“ என தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிவகங்கை மாவட்டத்தில் சவடு மண் எடுக்க அனுமதித்ததை ரத்து செய்யக்கோரி வழக்கு கலெக்டர் விரிவான பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
சிவகங்கை மாவட்டத்தில் சவடு மண் எடுக்க அனுமதித்ததை ரத்து செய்யக்கோரி வழக்கில் கலெக்டர் விரிவான பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. “வடமாநிலங்களை போன்ற துப்பாக்கி கலாசாரத்தை அனுமதிக்க முடியாது” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
வடமாநிலங்களை போன்ற துப்பாக்கி கலாசாரத்தை அனுமதிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
3. ‘சிங்கம்’ படப்பாணியில் சாகசம் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்
மத்தியபிரதேசத்தில் ‘சிங்கம்’ படப்பாணியில் சாகசம் செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
4. டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை குவித்து வைத்திருந்த வியாபாரிக்கு ரூ.1¼ லட்சம் அபராதம்
கூடலூரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளை குவித்து வைத்திருந்த வியாபாரிக்கு ரூ.1¼ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
5. பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.8.25 லட்சம் அபராதம் - ஜெர்மனி அரசு அதிரடி
ஜென்மனியில் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் ரூ.8.25 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது.

அதிகம் வாசிக்கப்பட்டவை