ஊதிய உயர்வு கோரி சென்னையில் டாக்டர்கள் உண்ணாவிரதம்
ஊதிய உயர்வுகோரி சென்னையில் டாக்டர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
சென்னை,
தமிழக அரசு டாக்டர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கக்கோரியும், மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. அரசு தரப்பில் அவர்களுடன் பலமுறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் ஏற்படவில்லை. இதையடுத்து கடந்த ஜூலை 18-ந்தேதி டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவு மற்றும் இதர மருத்துவ சேவைகளை புறக்கணித்தனர். இருப்பினும் அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று முதல் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 5 டாக்டர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டம் குறித்து டாக்டர் பெருமாள்பிள்ளை கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த சுகாதாரத்துறை கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு வருகிறது. ஆனால் அதே மருத்துவமனைகளில் பணிபுரிந்து, நோயாளிகளுக்கு சேவை செய்யும் எங்களுக்கு சரியான ஊதியம் வழங்க மறுக்கிறது. சட்டமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது, பரிசீலித்து வருகிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் பதில் அளித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இந்த உண்ணாவிரதத்தில் டாக்டர்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தாலோ அல்லது போராட்டம் நடத்தவிடாமல் எங்களை கைது செய்தாலோ, தமிழகம் முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். தமிழக அரசு உடனடியாக எங்கள் கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story