மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல், புதுவையில் பலத்த பாதுகாப்பு
தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருப்பதை தொடர்ந்து, பக்கத்து மாநிலமான புதுவை மாநிலத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
புதுச்சேரி,
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆனார்கள்.
இந்த தாக்குதலை நடத்திய தற்கொலைப்படை பயங்கரவாதிகளுடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிலர் சிக்கினார்கள்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து எழுந்துள்ள சூழ்நிலைகள் காரணமாகவும், சுதந்திர தினத்தை முன்னிட்டும் சென்னையிலும், தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த சூழ்நிலையில் இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தை போன்று இந்தியாவிலும் அதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.களுக்கும் எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியது. காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தால், பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் நாடு முழுவதும் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பயங்கரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக எச்சரிக்கை விடுத்து மத்திய உளவுத்துறை நேற்று முன்தினம் மதியம் 2 மணி அளவில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதிக்கு அவசர கடிதம் ஒன்றை இ-மெயில் மூலம் அனுப்பியது. அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இலங்கையில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 6 பேர் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளிவந்து உள்ளன. இந்துக்கள் போன்று மாறுவேடமிட்டு, தமிழகத்தில் தாக்குதல் நடத்தும் திட்டத்தோடு நுழைந்திருக்கும் பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்த இலியாஸ் அன்வர் என அடையாளம் காணப் பட்டு உள்ளது. மீதம் உள்ள 5 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்துக்களை போன்று நெற்றியில் விபூதி பூசியும், திலகமிட்டும் அவர்கள் மாறுவேடத்தில் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். தற்போது அந்த பயங்கரவாத குழு கோவையில் இருக்கிறது.
முக்கிய மத வழிபாட்டு தலங்கள், வெளிநாட்டு பயணிகள் அதிகம் வரும் சுற்றுலா தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கு அந்த பயங்கரவாத குழு இலக்கு நிர்ணயித்து உள்ளது.
மேலும் முக்கிய பாதுகாப்பு துறை அலுவலகங்கள், வெளிநாட்டு தூதரகங்கள், மத்திய-மாநில அரசுகளின் முக்கிய அலுவலகங்களில் தாக்குதல் நடத்துவதற்கும் அவர்கள் முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்று கருதப்படுகிறது. இதேபோல் இந்து மத தலைவர்கள் மற்றும் வழிபாட்டு தலங்களையும் இலக்காக நிர்ணயிக்கக்கூடும். எனவே அனைத்து மாவட்டங்கள், நகரங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் நுண்ணறிவு பிரிவின் செயல்பாடுகள் உடனடியாக ‘உஷார்’ நிலையை அடையவேண்டும்.
ஊடுருவியவர்கள், மர்ம நபர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து பயங்கரவாதிகளின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இதேபோல சட்ட விரோதமாக படகுகளில் ஊடுருவல்காரர்கள் நகர்வு இருக்கிறதா? என்பதையும் கண்காணிக்க வேண்டும். இந்த தகவலை மீனவர்களுக்கு அதிகாரிகள் குழு தெரிவித்து, சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க சொல்ல வேண்டும்.
உளவுத்துறையை தகவலை தொடர்ந்து பாதுகாப்பை உறுதி செய்து விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெறாத வகையில், பயங்கரவாதிகள் இலக்காக நிர்ணயித்துள்ள இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதோடு, தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
உடனடியாக, இந்தத் தகவலை போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் கமிஷனர்களுக்கு தெரிவித்ததுடன், தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தும்படி உத்தரவு பிறப்பித்தார். மேலும், கடலோர பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமாக திரியும் படகுகளையும் கண்காணிக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டை கண்டறியும் நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
வணிக வளாகங்கள், கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்குள் நுழையும் வாகனங்களை, போலீசார் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி தீவிர சோதனை நடத்திய பின்னரே உள்ளே அனுமதிக்கிறார்கள்.
புதுவையிலும் போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா உத்தரவின்பேரில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மேற்பார்வையில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர், அமைச்சர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாநில எல்லைப்பகுதியான கன்னியக்கோவில், மதகடிப்பட்டு, காலாப்பட்டு பகுதியில் போலீசார் சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சந்தேகப்படும் நபர்களை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு மாறன், ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று இரவு புதுவை ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வெளிமாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் வந்த பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். போலீஸ் மோப்ப நாய், மெட்டல் டிடெக்டர் மூலமாகவும் சோதனை நடத்தப்பட்டது.
புதுவை புதிய பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பயணிகளின் உடமைகளை அவர்கள் சோதனை செய்தனர்.
மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் கடற்கரை சாலை, பாரதி பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர காவல்படையினர் கடல்பகுதியில் ரோந்து மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story