திருப்புவனத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி - அமைச்சர் ஆய்வு
திருப்புவனத்தில் புதிய பஸ்நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியை அமைச்சர் ஆய்வு செய்தார்.
மானாமதுரை,
திருப்புவனத்தில் நீண்ட நாள் கோரிக்கைக்கு பின்பு பஸ்நிலையம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யும் பணியை அமைச்சர் பாஸ்கரன், நாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் கலெக்டர் ஜெயகாந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். திருப்புவனத்தில் பஸ்நிலையம் இல்லாததால் வெளியூர் செல்ல பொதுமக்கள் மழையிலும் வெயிலிலும் காத்திருந்து பஸ் ஏற அவதியடைந்து வருகின்றனர். இதற்காக பொதுமக்கள் சார்பில் திருப்புவனத்தில் பஸ் நிலையம் அமைக்க பலமுறை மனு கொடுத்தும் போதிய இடம் கிடைக்காததால் பஸ் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் இருந்தது.
இதையடுத்து சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ. திருப்புவனத்தில் பஸ்நிலையம் அமைக்க முயற்சிகள் எடுத்துவந்தார். இந்தநிலையில் நேற்று பஸ்நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 2 இடங்களை அமைச்சர், எம்.எல்.ஏ., கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அதில் தற்போது திருப்புவனத்தின் மைய பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா வேன்கள் நிறுத்தப்படும் இடமாக செயல்பட்டு வரும் 2½ ஏக்கர் நிலத்தை முதலில் பார்வையிட்டனர். இந்த இடம் பலரும் வந்து செல்ல மிகவும் வசதியான இடம், அருகிலேயே பெண்கள் பள்ளி, ஆண்கள் பள்ளியும் இருப்பதால் மாணவ, மாணவிகளுக்கும் வசதியாக இருக்கும் என ஆலோசிக்கப்பட்டது.
இதே போல நான்கு வழிச்சாலை பைபாஸ் ரோடு அருகே உள்ள ஒரு ஏக்கர் நிலமும் பார்வையிட்டு ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு மிகவும் பயன் தரும் இடத்தை தேர்வு செய்து அதில் பஸ்நிலையம் அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 2 இடம் குறித்து ஆய்வறிக்கை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட உள்ளது. அதன்பின்பு விரைவில் திருப்புவனத்தில் பஸ்நிலையம் அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story