ஆரணி ஒன்றியங்களில், பசுமை வீடு கட்ட 117 பேருக்கு பணி உத்தரவு - அமைச்சர் வழங்கினார்
ஆரணி ஒன்றியங்களில் பசுமை வீடு கட்ட 117 பேருக்கு பணி உத்தரவை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
ஆரணி,
ஆரணி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் பசுமை வீடு திட்டத்தில் 65 நபர்களுக்கும், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் 52 நபர்களுக்கும் பணி உத்தரவு வழங்கும் விழா நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எல்.சீனிவாசன், ரவி, ஜி.எழிலரசு ஆகியோர் தலைமை தாங்கினர். வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, ஒன்றியக்குழு முன்னாள் தலைவர்கள் சாந்திசேகர், வக்கீல் கே.சங்கர், அ.கோவிந்தராசன், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், வேலு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் பி.திருமால், ரவி, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பசுமை வீடு திட்டத்தில் தலா ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 65 நபர்களுக்கும், பாரத பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 52 நபர்களுக்கும், ஆக மொத்தம் 117 நபர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி உத்தரவினை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பயனாளிகள், பொதுமக்கள், கட்சி பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆரணி, பையூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வெங்கடேசன் (வயது 28) என்பவர் கடந்த 18-ந் தேதி மழையின்போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தமிழக முதல்-அமைச்சரின் நிவாரண நிதி வழங்க கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் அரசுக்கு பரிந்துரை செய்தனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நேற்று மாலை இறந்த வெங்கடேசனின் தாய் மலரிடம் ரூ.4 லட்சம் நிவாரண நிதியை வழங்கி ஆறுதல் கூறினார்.
அப்போது உதவி கலெக்டர் இல.மைதிலி, தாசில்தார் தியாகராஜன், வருவாய் ஆய்வாளர் ரங்கநாதன், கிராம நிர்வாக அலுவலர் இளவரசன், பையூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் மணிமேகலை, கலாரகு உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story