அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் கலெக்டர் ராமன் வேண்டுகோள்
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று கலெக்டர் ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலம்,

நாடு முழுவதும் வருகிற 2-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வழிபாட்டிற்கு பிறகு நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். அண்மை காலமாக ரசாயன வண்ண கலவைகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
களிமண்ணால் செய்யப்பட்டதும், எந்தவித ரசாயன கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே செய்யப்படும் விநாயகர் சிலைகள் தான் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட வேண்டும். மாசு ஏற்படுத்தக்கூடிய மற்றும் மறுசுழற்சிக்கு ஒவ்வாத ரசாயன வண்ண கலவை பூசப்பட்ட சிலைகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.
இதை கண்காணிக்க கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அனைத்து தாலுக்காகளிலும் விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படும் இடங்களில் துணை தாசில்தார்கள் நிலையிலான அலுவலர்கள், மாசுக்கட்டுபாட்டு வாரிய அலுவலர்கள், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் தணிக்கை மேற்கொள்வார்கள்.
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதிக்கப்படும் நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லும் போது ஏற்கனவே கடந்த ஆண்டு அனுமதிக்கப்பட்ட வழியாக மட்டுமே செல்ல வேண்டும். பதற்றமான பகுதிகளில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் கூடுதல் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், உதவி கலெக்டர்(பயிற்சி) மோனிகா ராணா, மாவட்ட கலெக்டரிடன் நேர்முக உதவியாளர் அம்பாயிரநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story