திருச்செங்கோடு, மோகனூர், எருமப்பட்டியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
திருச்செங்கோடு, மோகனூர், எருமப்பட்டி பகுதியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
நாமக்கல்,
திருச்செங்கோடு நெசவாளர் காலனி தாய், சேய் நல விடுதியில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடந்தது. திருச்செங்கோடு நகராட்சியில் 1-வது வார்டு முதல் 5-வது வார்டு வரை உள்ள பகுதி மக்களுக்காக நடைபெற்ற இம்முகாமை திருச்செங்கோடு பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) என்ஜினீயர் சுகுமார் மற்றும் வருவாய்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, நகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முகாமில் முதியோர், விதவை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, புதிய ரேஷன்கார்டு, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது.
திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராமத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் சின்னஎலச்சிபாளையம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இதில் எலச்சிபாளையம் அகரம் கிராமத்தில் தீர்க்கப்படாத 32 கோரிக்கைகள் அடங்கிய கோரிக்கை மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகளிடம் அளித்தனர்.
மேலும் எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம், கழிப்பிட வசதி அமைக்க வேண்டும். போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள நூலக கட்டிடம் புதிதாக கட்டித்தர வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக எலச்சிபாளையத்தில் இயங்கிவந்த 108 ஆம்புலன்சை மீண்டும் எலச்சிபாளையத்துக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த தார்சாலைகளை சரி செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களும் அளிக்கப்பட்டது.
மோகனூர் பேரூராட்சி அலுவலகத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மோகனூர் தாசில்தார் ராஜேஸ்கண்ணா தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம், மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மோகனூர் பேரூராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் சீரான குடிநீர் வழங்க வேண்டும், சாலை வசதி, மின்விளக்கு சரிசெய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சரி செய்ய வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
அதேபோல் மோகனூர் தாலுகாவில் பாலப்பட்டி, வளையபட்டி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளிலும் முகாம் நடைபெற்றது. இதில் வருவாய் ஆய்வாலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்கள்.
எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி பொன்னேரி கிராமத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம், சேந்தமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பட்டா மாறுதல், ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை ஆகியவைகளுக்கு மனுக்கள் பெறப்பட்டன.
இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரோகிணி, எருமப்பட்டி உதவி வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி தோட்டக்கலை அலுவலர் கோபாலகிருஷ்ணன், எருமப்பட்டி வருவாய் ஆய்வாளர் சாலா, பொன்னேரி கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வன், எருமப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அழகேஷ், கோடங்கிப் பட்டி கிராம நிர்வாக அலுவலர் சிவராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story