வண்டல்-குண்டூரான்வெளி இடையே சாலை அமைக்கும் பணி: பேரூராட்சிகள் இணை இயக்குனர் ஆய்வு


வண்டல்-குண்டூரான்வெளி இடையே சாலை அமைக்கும் பணி: பேரூராட்சிகள் இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Aug 2019 3:45 AM IST (Updated: 24 Aug 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

வண்டல்-குண்டூரான்வெளி இடையே சாலை அமைக்கும் பணியை பேரூராட்சிகள் இணை இயக்குனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வாய்மேடு, 

நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட வண்டல், குண்டூரான்வெளி பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வண்டலில் இருந்து குண்டூரான் வழியாக தலைஞாயிறு பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.

மழை காலங்களில் இந்த சாலையில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் படகுகள் மூலமாக தான் தலைஞாயிறுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.6 கோடி மதிப்பீட்டில் வண்டல்- குண்டூரான் இடையே புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை பேரூராட்சிகள் இணை இயக்குனர் குற்றாலிங்கம் தலைமையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பேரூராட்சி இணை இயக்குனர் அறிவுறுத்தினார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித், ஒப்பந்தக்காரர் முத்துக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story