தஞ்சையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்குரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


தஞ்சையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்குரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 24 Aug 2019 3:45 AM IST (Updated: 24 Aug 2019 2:08 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்குரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரிடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் விளங்கி வருகின்றன. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதோடு கோடை நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவினியோகத்திட்டத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இது தவிர தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல், தஞ்சை பிள்ளையார்பட்டி, அம்மன்பேட்டை, புனல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

நேற்று இந்த சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,000 டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அந்த நெல் மூட்டைகள் சரக்குரெயிலில் 21 வேகன்களில் ஏற்றப்பட்டு, அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story