குஜராத் மாதிரி அரசியலை மராட்டியத்திலும் பா.ஜனதா செயல்படுத்துகிறது தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு
கட்சித்தாவல் விவகாரத்தில் குஜராத் மாதிரி அரசியலை மராட்டியத்தில் பா.ஜனதா செயல்படுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மும்பை,
கட்சித்தாவல் விவகாரத்தில் குஜராத் மாதிரி அரசியலை மராட்டியத்தில் பா.ஜனதா செயல்படுத்துவதாக தேசியவாத காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தொடர் கட்சித்தாவல்
மராட்டியத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ஆளும் பா.ஜனதா மற்றும் சிவசேனா கட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.
குறிப்பாக காங்கிரஸ் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்த ராதாகிருஷ்ண விகேபாட்டீல், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிவேந்திரசிங் போசாலே, சந்திப் நாயக் மற்றும் வைபவ் பிச்சாத் ஆகியோர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
இதேபோல் தேசியவாத காங்கிரஸ் மும்பை தலைவர் சச்சின் அஹிர், காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிர்மலா காவித் ஆகியோர் சிவசேனாவில் இணைந்தனர்.
இதுகுறித்து சச்சின் அஹிர் கட்சி விலகலை அடுத்து மும்பை தேசியவாத காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவாப் மாலிக் கூறியதாவது:-
எதிர்பார்ப்பு காரணமாக...
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் பலர் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளில் இணையப்போவதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் தோற்றுவிடுவோம் என்ற பயத்தின் காரணமாகவும், ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாகவும், சில எதிர்பார்ப்பின் காரணமாகவும் செல்கின்றனர்.
இந்த தலைவர்கள் விலகியதை வைத்து எதிர்க்கட்சிகள் பலவீனம் அடைந்ததை போன்ற பிம்பத்தை உருவாக்க பா.ஜனதா முயற்சிக்கிறது. இது குஜராத் மாதிரி அரசியலாகும். இதை மராட்டியத்திலும் பா.ஜனதா செய்து வருகிறது.
2002-ம் ஆண்டில் இருந்து அங்கு ஒவ்வொரு முறை தேர்தல் நெருங்கும்போதும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால் இது குஜராத்தில் காங்கிரசின் ஓட்டு சதவீதத்தை ஒருபோதும் பாதித்தது இல்லை. சிலர் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைவதால் அவர்களின் ஓட்டுகளும் அங்கு சென்றுவிடாது.
இதேபோல் மராட்டியத்திலும் சிலர் ஆளும் கட்சிக்கு தாவியுள்ளதால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் தங்கள் ஓட்டுக்களை இழக்காது.
இவ்வாறு இவர் கூறினார்.
Related Tags :
Next Story