வளர்ச்சித்திட்ட பணிகள், ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
அரியலூர் மாவட்டம், குண்டவெளி ஊராட்சி, ராமதேவநல்லூர் கிராமத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், குண்டவெளி ஊராட்சி, ராமதேவநல்லூர் கிராமத்தில் உள்ள நெடு ஏரி என்கிற அளவேரியில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் ஏரியின் கரையை பலப்படுத்துதல் மற்றும் மதகுகள் புனரமைப்பு பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜாரவி, நகர செயலாளர் செல்வராஜ், மாவட்ட அம்மா பேரவை மனோகரன், வர்த்தக சங்க தலைவர் ராஜாஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் கூட்டுறவு நிறுவனங்களுக்கு சொந்த அலுவலக கட்டிடம் கட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து வட்டியில்லாத கடனாக நிதிஉதவி பெறப்பட்டு அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதற்கு அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளரும், கூட்டுறவு சங்க தலைவருமான தங்கபிச்சமுத்து தலைமை தாங்கினார். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணைத்தலைவர் மஞ்சுளா ஜெயசங்கர் வரவேற்றார். முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் செல்வம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story