பால் ஏ.டி.எம்


பால் ஏ.டி.எம்
x
தினத்தந்தி 25 Aug 2019 4:30 AM IST (Updated: 24 Aug 2019 6:37 PM IST)
t-max-icont-min-icon

ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கை நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒடிசா மாநிலத்திலும் அத்தகைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பால் வினியோகத்திற்கு பிளாஸ்டிக் கவர்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பாலித்தீன் கவர்களில் பாலை அடைத்து விற்பனை செய்வதற்கு மாற்றாக பால் வினியோகிக்கும் ஏ.டி.எம்.களை நிறுவும் முயற்சியில் அரசு களம் இறங்கி இருக் கிறது. முதற்கட்டமாக ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் பெர்காம்பூர் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பால் ஏ.டி.எம்.கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஏ.டி.எம். மையம் மூலம் 500 லிட்டர் பால் வினியோகிக்கலாம்.

இதற்காக 7200 பால் உற்பத்தியாளர்கள் மூலம் மாவட்ட நிர்வாகம் பால் சப்ளை செய்து வருகிறது. ஏ.டி.எம்.மில் 40 ரூபாய் செலுத்தி ஒரு லிட்டர் பால் பெற்றுக்கொள்ளலாம். குறைந்தபட்சமாக 250 மில்லி லிட்டர் பால் 10 ரூபாய்க்கு வினியோகிக்கப்படுகிறது. இந்த பால் ஏ.டி.எம்.க்கு அந்த பகுதி மக்கள், கூலி தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. பாத்திரங்கள், பாட்டில்களை எடுத்து சென்று ஏ.டி.எம்.மில் பாலை பிடித்து செல்கிறார்கள்.

தேவைப்படும் பொழுது ஏ.டி.எம்.முக்கு சென்று பால் வாங்கிக்கொள்ளலாம் என் கிறார்கள். வீட்டில் பிரிட்ஜ் இல்லாத பட்சத்தில் பால் கெட்டுவிடும் என்ற கவலை இல்லை என்றும் சொல்கிறார்கள். மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையில் பால் ஏ.டி.எம்.களை நிறுவுவதற்கான முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Next Story