மீஞ்சூர், அச்சரப்பாக்கத்தில் நீர் மேலாண்மை சிறப்பு கிராமசபை கூட்டம்


மீஞ்சூர், அச்சரப்பாக்கத்தில் நீர் மேலாண்மை சிறப்பு கிராமசபை கூட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2019 10:00 PM GMT (Updated: 24 Aug 2019 6:26 PM GMT)

மீஞ்சூர், அச்சரப்பாக்கத்தில் நீர் மேலாண்மை சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.

மீஞ்சூர்,

மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் என்னும் நீர் மேலாண்மையியல் நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, இதர நீர்நிலைகள், ஏரிகள் புனரமைத்தல், ஆழ்துளை கிணறுகள் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்த மத்திய அரசு செயலாளர்களின் கடிதத்தின் பேரில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் மீஞ்சூர், சோழவரம் ஒன்றியங்களில் நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முறையாக நடைபெறுகிறதா? என்பதை கிராம வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம் கொண்டகரை, வன்னிப்பாக்கம் அனுப்பம்பட்டு ஊராட்சிகளில் ஆய்வு செய்து நீர் மேலாண்மை குறித்து விளக்கி பேசினார். அப்போது ஊராட்சி செயலாளர்கள் முருகன், இளஞ்சூரியன் மற்றும் மகளிர் குழுவினர் பொதுமக்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

சோழவரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் அருமந்தை, அழிஞ்சிவாக்கம், சோழவரம், ஆங்காடு ஊராட்சிகளில் நடந்த சிறப்பு கிராமசபை கூட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களிடம் விளக்கி பேசினார்.

காஞ்சீபுரம் மாவட்டம் அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடந்தது. கூட்டத்திற்கு அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் தலைமை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

அச்சரப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம் மேற்பார்வையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.

Next Story