நம்பியூர் அருகே மாயமான மாணவி வாய்க்காலில் குதித்து தற்கொலை


நம்பியூர் அருகே மாயமான மாணவி வாய்க்காலில் குதித்து தற்கொலை
x
தினத்தந்தி 25 Aug 2019 3:30 AM IST (Updated: 25 Aug 2019 12:25 AM IST)
t-max-icont-min-icon

நம்பியூர் அருகே மாயமான மாணவி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடத்தூர்,

நம்பியூர் அருகே உள்ள மோனக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மகள் கோகுல சிவரஞ்சனி (வயது 16). இவர் கடத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கோகுல சிவரஞ்சனி கடந்த 21-ந் தேதி வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு சென்று வருவதாக சைக்கிளில் புறப்பட்டார். ஆனால் பள்ளிக்கூடம் முடிந்து மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இதுகுறித்து கோகுல சிவரஞ்சனியின் தந்தை பழனிசாமி கடத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இந்த நிலையில் மாணவியின் உடல் நேற்று காலை நம்பியூர் அலிங்கியம் அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் கிடந்தது. கரையோரம் அவருடைய சைக்கிளும் கிடந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கோகுல சிவரஞ்சனி சரியாக படிக்கவில்லை என்று கூறி அவரது பெற்றோர் திட்டியதால் மனம் உடைந்து அவர் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story