ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு


ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு
x
தினத்தந்தி 25 Aug 2019 4:00 AM IST (Updated: 25 Aug 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் அறிவிப்பு ஒலிப்பெருக்கி ஒன்றினை தனியார் சிமெண்டு நிறுவனம் ஒன்று அமைத்து கொடுத்துள்ளது.

வி.கைகாட்டி,

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி நான்கு வழிச்சாலையில் அறிவிப்பு ஒலிப்பெருக்கி ஒன்றினை தனியார் சிமெண்டு நிறுவனம் ஒன்று அமைத்து கொடுத்துள்ளது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை நிறுத்தி இனிமேல் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளை ஓட்டுவோம் என்று உறுதிமொழி ஏற்க செய்தார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story