மாவட்ட செய்திகள்

திருச்சியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை சம்பவம்: மருத்துவத்துறை தலைவர் மீது பெற்றோர் புகார் + "||" + Woman doctor hanging case in Trichy: Parents' complaint

திருச்சியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை சம்பவம்: மருத்துவத்துறை தலைவர் மீது பெற்றோர் புகார்

திருச்சியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை சம்பவம்: மருத்துவத்துறை தலைவர் மீது பெற்றோர் புகார்
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவத்தில் மருத்துவத்துறை தலைவர் மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகின்றார்.
திருச்சி,

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அம்புஜவல்லிபேட்டையை சேர்ந்த பொன்னிவளவனின் மகள் கயல்விழி (வயது 31). இவர் திருச்சி அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்தார். மேலும் இவர் பெரியமிளகு பாறையில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் விடுதியில் தங்கி எம்.எஸ். முதுநிலை படிப்பு படித்து வந்தார். கயல்விழிக்கும் சேலத்தை சேர்ந்த அரசு டாக்டர் சக்திகணேஷ்க்கும் கடந்த ஜூலை மாதம் 11-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் தங்களது பணிக்கு திரும்பினர்.


இந்த நிலையில் திருச்சி மருத்துவக்கல்லூரி விடுதியில் கயல்விழி நேற்று முன்தினம் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்த பெண் டாக்டரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவத்துறை தலைவர் மீது புகார்

தகவல் அறிந்ததும் தற்கொலை செய்த கயல்விழியின் பெற்றோர், கணவர் சக்திகணேஷ் மற்றும் உறவினர்கள் திருச்சிக்கு விரைந்து வந்தனர். கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று காலை சோகத்துடன் திரண்டு நின்றனர். கயல்விழியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்.

அதில் மருத்துவ கல்லூரியில் எம்.எஸ்.துறை தலைவர், கயல்விழியிடம் மரியாதை குறைவாக பேசியதாகவும், கெட்ட வார்த்தையால் திட்டியதாகவும், இது தொடர்பாக தன்னிடம் செல்போனில் பல முறை கூறியிருக்கிறார் எனவும், அந்த மன உளைச்சலின் காரணமாக தான் அவர் தற்கொலை செய்திருப்பார் எனவும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருந்தனர். மேலும் கயல்விழியின் செல்போன் எண்ணை ஆராயும் படியும், அவர் வசித்த விடுதி கட்டிடத்தில் தங்கியுள்ள சக மாணவிகளிடமும் விசாரிக்க கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீசார் அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இதற்கிடையில் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூடத்தில் கயல்விழியின் உடல் பிரேத பரிசோதனை செய்த பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சொந்த ஊருக்கு அவரது உடலை கொண்டு சென்றனர். இதற்கிடையில் திருமணமான ஒன்றரை மாதத்தில் பெண் டாக்டர் தற்கொலை செய்தது தொடர்பாக திருச்சி உதவி கலெக்டர் அன்பழகனும் விசாரணை நடத்தி வருகின்றார். திருச்சி பெண் டாக்டர் தற்கொலை சம்பவத்தில் மருத்துவ துறை தலைவர் மீது புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. காலாண்டு தேர்வு எழுத மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் நூதன போராட்டம்
கடமலைக்குண்டு அருகே, காலாண்டு தேர்வு எழுத மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் நூதன போராட்டம் நடத்திய பெற்றோர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
2. நீதிபதி அடித்ததாக போலீஸ்காரர் புகார் - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
நீதிபதி அடித்ததாக போலீஸ்காரர் புகார் தெரிவித்ததால், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
3. அரசு பஸ்களில் ஏற்ற மறுத்தால் பயணிகள் புகார் தெரிவிக்கலாம் - அதிகாரிகள் தகவல்
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ்நிலையத்தில் இருந்து அரசு பஸ்களில் பயணிகளை ஏற்ற மறுக்கும் ஊழியர்கள் மீது மானாமதுரை பஸ் நிலையத்தில் புகார் செய்யலாம் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
4. அன்னவாசல், மாத்தூர், விராலிமலை போலீஸ் நிலையங்களில் தர்மபுரி அ.ம.மு.க. நிர்வாகி மீது அ.தி.மு.க.வினர் புகார்
அ.தி.மு.க. மாவட்ட மகளிர் அணி செயலாளர் அன்னலட்சுமி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீயிடம் மனு கொடுத்தனர்.
5. பெரம்பலூரில் டிராக்டர் தருவதாக கூறி மோசடி: ஏஜென்சி மேலாளர் மீது நடவடிக்கை கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் விவசாயி புகார்
பெரம்பலூரில் டிராக்டர் தருவதாக கூறி பண மோசடி செய்த ஏஜென்சி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயி ஒருவர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை