தாசில்தார்கள் பணியிட மாற்றம்: கலெக்டர் உத்தரவு


தாசில்தார்கள் பணியிட மாற்றம்: கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 25 Aug 2019 3:30 AM IST (Updated: 25 Aug 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

வாலாஜா தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றிய இந்துமதி வாலாஜா ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ரவி வாலாஜா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், வேலூர் கலால் உதவி ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் ரமேஷ் ஆம்பூர் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சுஜாதா வேலூர் கலால் உதவி ஆணையர் அலுவலக கண்காணிப்பாளராகவும், வேலூர் தாலுகா ஆதிதிராவிடர் நல தாசில்தார் சரவணமுத்து வேலூர் தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த ரமேஷ் குடியாத்தம் தாலுகா ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த கோட்டீஸ்வரன் அரக்கோணம் (சிப்காட்) - பனப்பாக்கம் திட்ட நிலஎடுப்பு தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த பி.பாலாஜி, வாலாஜா தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த பூமா வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக நேர்முக உதவியாளராக பணியாற்றிய ஸ்ரீராம், ஆம்பூர் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த முரளிகுமார் வேலூர் தாலுகா ஆதிதிராவிடர் நல தாசில்தாராகவும், குடியாத்தம் தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கலைவாணி வேலூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சிவக்குமார் ஆம்பூர் நகர நில வரித்திட்ட தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த சரவணன் வேலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அலுவலக பறக்கும்படை தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த தாசில்தார் எஸ்.பாலாஜி வேலூர், பெங்களூரு-சென்னை விரைவுப்பாதை தேசிய நெடுஞ்சாலை நிலஎடுப்பு தாசில்தாராகவும், அங்கு பணிபுரிந்த பாலமுருகன், காட்பாடி தாசில்தாராகவும், விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் தாசில்தார் ரமாநந்தினி குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் பிறப்பித்துள்ளார்.

Next Story