நெல்லையில் அ.தி.மு.க. சார்பில் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம்
நெல்லையில் அ.தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
நெல்லை,
நெல்லையில் அ.தி.மு.க. சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
விழிப்புணர்வு துண்டுபிரசுரம்
தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தமிழகம் முழுவதும் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்து, நகர பகுதிகளிலும், மாநகராட்சி பகுதிகளிலும் நடக்கிறது.
இந்த சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விழிப்புணர்வு துண்டுபிரசுரம் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
வினியோகம்
இந்த துண்டுபிரசுரம் வினியோகம் செய்யும் பணியை நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா நேற்று காலை நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோவில் முன்பு தொடங்கி வைத்தார். பின்னர் அவர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஊர்வலமாக மேலரதவீதி, வடக்கு ரதவீதி, கீழரதவீதிக்கு சென்று அங்குள்ள கடைகளில் துண்டுபிரசுரம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் விஜிலா சத்யானந்த் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.பி.ஆதித்தன், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story