மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் + "||" + Auto drivers demonstration

ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்,

குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நாடு முழுவதும் ஆட்டோ மற்றும் மோட்டார் வாகன தொழிலாளர்கள், ஒர்க்‌ஷாப் தொழிலாளர்கள் 7 கோடி பேரின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கும் வகையிலும், அரசின் வட்டார போக்குவரத்து அலுவலகங்களை ஒழிக்கும் வகையிலும் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய மோட்டார் வாகன சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். இந்த சட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர் சங்க செயலாளர் பொன்.சோபனராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். உதவி தலைவர் அந்தோணி, ஆட்டோ சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிவகோபன், அரசு போக்குவரத்துக்கழக சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் ஸ்டீபன் ஜெயக்குமார், சகாய ஆன்றனி, ஓய்வுபெற்ற போக்குவரத்து நலச்சங்க செயலாளர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

1. வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூரில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நாகையில் நடந்தது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. குளச்சலில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் மாணவர் இயக்கங்கள் சார்பில் நடந்தது
குளச்சல் மற்றும் அழகியமண்டபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி, மாணவர்கள் இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
4. போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை கண்டித்து தர்மபுரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்
போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை கண்டித்து தர்மபுரியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் 40 பேர் மீது வழக்குப்பதிவு.
5. கோவையில், கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவையில் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.