மேம்பாலத்தில் இருந்து கார் கால்வாயில் பாய்ந்தது; டாக்டர் பலி சிவசேனா எம்.பி. மகaன் உள்பட 2 பேர் படுகாயம்
டயர் வெடித்ததால் கார் மேம்பாலத்தில் இருந்து கால்வாயில் பாய்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த டாக்டர் பலியானார். உடன் இருந்த சிவசேனா எம்.பி.யின் மகன் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
வசாய்,
டயர் வெடித்ததால் கார் மேம்பாலத்தில் இருந்து கால்வாயில் பாய்ந்தது. இதில் காரை ஓட்டி வந்த டாக்டர் பலியானார். உடன் இருந்த சிவசேனா எம்.பி.யின் மகன் உள்பட 2 பேர் படுகாயமடைந்தனர்.
சிவசேனா எம்.பி மகன்
பால்கரில் சிவசேனா கட்சி எம்.பி.யாக இருந்து வருபவர் ராஜேந்திர காவித். இவரது மகன் ரோகித் (வயது24). இவர் சம்பவத்தன்று தனது நண்பர் ஜெத்தின் (38) உடன் நந்தூர்பர் சென்றிருந்தார். பின்னர் அங்கிருந்து நாசிக்கை சேர்ந்த டாக்டர் சஞ்சய் என்பவருடன் காரில் மும்பை- நாசிக் நெடுஞ்சாலை வழியாக பால்கர் திரும்பி வந்து கொண்டிருந்தார். காரை டாக்டர் சஞ்சய் ஓட்டினார்.
திரிம்பகேஸ்வர் அருகே மேம்பாலத்தில் வந்த போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கார் டாக்டர் சஞ்சயின் கட்டுப்பாட்டை இழந்தது.
டாக்டர் பலி
தாறுமாறாக சென்ற கார் மேம்பாலத்தில் இருந்து கால்வாயில் பாய்ந்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த நாசிக் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரில் சிக்கி இருந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் டாக்டர் சஞ்சய் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் படுகாயம் அடைந்த ரோகித், ஜெத்தின் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story