நூதன முறையில் பெண்ணிடம் ரூ.4 லட்சம் அபேஸ் வெளிநாட்டுக்காரர் போல முகநூலில் பழகியவருக்கு வலைவீச்சு


நூதன முறையில் பெண்ணிடம் ரூ.4 லட்சம் அபேஸ் வெளிநாட்டுக்காரர் போல முகநூலில் பழகியவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Aug 2019 4:30 AM IST (Updated: 25 Aug 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டுக்காரர் என முகநூலில் பழகி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.4 லட்சம் அபேஸ் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை, 

வெளிநாட்டுக்காரர் என முகநூலில் பழகி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.4 லட்சம் அபேஸ் செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

முகநூல் நட்பு

மும்பை கோரேகாவ் பகுதியில் 34 வயது பெண் அழகுகலை நிபுணர் வசித்து வருகிறார். இவர் காந்திவிலி பகுதியில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவருக்கு மைக் என்ற பெயரில் இங்கிலாந்தை சேர்ந்தவர் என கூறிகொண்டு முகநூலில் ஒருவர் அறிமுகம் ஆனார்.

பெண்ணும் வெளிநாட்டு நபர் என நினைத்து அவருடன் நட்பாக பழகி வந்தார். ஒருநாள் அந்த வெளிநாட்டு நபர் மும்பையில் வீடு ஒன்று வாங்க விரும்புவதாக கூறினார். மேலும் அதற்குரிய பணம், விலை உயர்ந்த அன்பளிப்புகளை அனுப்புவதாக பெண்ணிடம் கூறினார்.

ரூ.4 லட்சம் மோசடி

இந்தநிலையில் சம்பவத்தன்று டெல்லி விமானநிலைய சுங்க அதிகாரி என கூறி ஒருவர், பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார். அவர் பெண்ணுக்கு இங்கிலாந்தில் இருந்து அதிகளவு பணம், விலை உயர்ந்த பொருட்கள் வந்திருப்பதாக கூறினார். மேலும் அதை விடுவிக்க வேண்டும் என்றால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இதை உண்மையென நம்பிய பெண் நபர் கூறிய வங்கி கணக்குக்கு ரூ.4 லட்சம் வரை அனுப்பினார். ஆனாலும் சுங்க அதிகாரி என பேசியவர் மேலும் பல காரணங்களை கூறி பணம் கேட்டு கொண்டே இருந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்தார். இதையடுத்து அவர் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டுக்காரர் போல முகநூலில் பழகி பெண்ணிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டவரை தேடி வருகின்றனர்.

Next Story