உடுமலை நகராட்சி பகுதியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று தொடங்குகிறது


உடுமலை நகராட்சி பகுதியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 26 Aug 2019 3:45 AM IST (Updated: 25 Aug 2019 7:25 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை நகராட்சி பகுதியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று தொடங்குகிறது.

உடுமலை,

நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு அதிகாரிகள் நேரடியாகச்சென்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, அந்த மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணும் வகையில் தமிழ்நாடு முதல்–அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி உடுமலை தாலுகாவில் கடந்த 22–ந் தேதி 11 ஊராட்சிகளில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம்கள் நடந்தன.

 உடுமலை நகராட்சி பகுதியில் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 1 முதல் 6 வது வார்டு வரை இன்றும்(திங்கட்கிழமை), 7 முதல் 12 வது வார்டு வரை நாளையும் (செவ்வாய்க்கிழமை), 13 முதல் 18 வது வார்டு வரை 28–ந் தேதியும், 19 முதல் 24 வது வார்டு வரை 29–ந் தேதியும், 25 முதல் 30 வது வார்டு வரை 30–ந் தேதியும், 31 முதல் 33 வது வார்டு வரை 31–ந் தேதியும் இந்த முகாம் நடக்கிறது.

இதில் உடுமலை நகராட்சி ஆணையாளர் ஓ.ராஜாராம் தலைமையில் மண்டல துணைத்தாசில்தார் பொன்ராஜ், துணை வேளாண்மை அலுவலர் செல்லமுத்து, உதவி தோட்டக்கலை அலுவலர் செல்வம் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெறுகின்றனர்.

உடுமலை தாசில்தார் கே.தயானந்தன் தலைமையில் உடுமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) ஈ.எம்.சுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டு மனுக்களைப் பெறும் முகாம் இன்று (திங்கட்கிழமை) வெனசப்பட்டி, கணபதி பாளையம், பெரியகோட்டை ஆகிய ஊராட்சிகளிலும், நாளை (செவ்வாய்க்கிழமை) தென்பூதிநத்தம், பூலாங்கிணர், ராகல்பாவி, ஆர்.வேலூர் ஆகிய ஊராட்சிகளிலும் 28–ந்தேதி வடபூதிநத்தம் போடி பட்டி, கண்ணமநாயக்கனூர் ஆகிய ஊராட்சிகளிலும் நடக்கிறது.

சமூக பாதுகாப்பு திட்ட தனித்தாசில்தார் மு.கிருஷ்ணவேணி தலைமையில் குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) எம்.ரொனால்டு ஷெல்டன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டு மனுக்களைப் பெறும் முகாம் இன்று(திங்கட்கிழமை) ஜல்லி பட்டி, லிங்கம்மாவூர், வெங்கிட்டாபுரம், சின்னகுமாரபாளையம் ஆகிய ஊராட்சிகளிலும், நாளை (செவ்வாய்க்கிழமை) குறிச்சிக்கோட்டை, பள்ளபாளையம், ஆலாம்பாளையம், தும்பலப் பட்டி ஆகிய ஊராட்சிகளிலும், 28–ந் தேதி போகிகவுண்டன் தாசர்பட்டி, குரல் குட்டை, குருவப்ப நாயக்கனூர், ஆண்டியகவுண்டனூர்–1 ஆகிய ஊராட்சிகளிலும், 29–ந் தேதி ஆண்டியகவுண்டனூர்–2, மானுப்பட்டி, எலையமுத்தூர், கல்லாபுரம் ஆகிய ஊராட்சிகளிலும் நடக்கிறது.

குடிமைப்பொருள் தனித்தாசில்தார் ப.தங்கவேல் தலைமையில் உடுமலை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஐ.மயில்சாமி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்து கொண்டு மனுக்களைப் பெறும் முகாம் இன்று(திங்கட்கிழமை) சர்க்கார் புதூர், ரெட்டிபாளையம், ஜிலோபநாயக்கன்பாளையம், அரசூர், கிருஷ்ணாபுரம் ஆகிய ஊராட்சிகளிலும், நாளை (செவ்வாய்க்கிழமை) சின்னபாப்பனூத்து, பெரியபாப்பனூத்து, உடுக்கம்பாளையம் ஆகிய ஊராட்சிகளிலும், 28–ந் தேதி புங்கமுத்தூர், செல்லப்பம்பாளையம், தேவனூர்புதூர், ராவணாபுரம் ஆகிய ஊராட்சிகளிலும், 29–ந்தேதி பெரியவாளவாடி, சின்னவாளவாடி, தீபாலபட்டி, மொடக்குப்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும் நடக்கிறது.

உடுமலை ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் சண்முகவடிவேல் தலைமையில் குடிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.பியூலாஎப்சிபாய் உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு மனுக்களைப் பெறும் முகாம் இன்று (திங்கட்கிழமை) குப்பம்பாளையம் ஆமந்தகடவு, வடுகபாளையம், குடிமங்கலம் ஆகிய ஊராட்சிகளிலும், நாளை(செவ்வாய்க்கிழமை) கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம், மூங்கில் தொழுவு ஆகிய ஊராட்சிகளிலும், 28–ந்தேதி வாகத்தொழுவு, வீதம் பட்டி, கொங்கல்நகரம், சோமவாரப்பட்டி ஆகிய ஊராட்சிகளிலும், 29–ந்தேதி தொட்டம்பட்டி, முக்கூடுஜல்லிபட்டி, கொசவம்பாளையம், அணிக்கடவு ஆகிய ஊராட்சிகளிலும், 30–ந்தேதி புதுப்பாளையம், இலுப்பநகரம், பண்ணைக் கிணறு ஆகிய ஊராட்சிகளிலும் இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடக்கிறது.

தளி பேரூராட்சி பகுதியில் செயல் அலுவலர் கார்த்திகேயன், உடுமலை தலைமையிடத்து துணைத்தாசில்தார் கிருஷ்ணவேணி, உதவி வேளாண்மை அலுவலர் டி.வைரமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு மனுக்களைப்பெறும் முகாம் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் 31–ந்தேதி வரை 5 நாட்கள் தினசரி வரிசையாக 3 வார்டுகள் வீதம் நடக்கிறது.

Next Story