தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கலாம் என தகவல் வெளியானதையடுத்து தர்மபுரி மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
தர்மபுரி,
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
மாவட்டத்தில் தங்கும் விடுதிகளில் தங்கியிருப்போரின் விவரங்களை சேகரித்து போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
இதேபோன்று அரூரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் அரூர் கச்சேரிமேடு ரவுண்டானாவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார், சரக்கு வேன், பார்சல் வேன், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து முக்கிய ஊர்களிலும் அந்தந்த பகுதியை சேர்ந்த போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும் மாவட்ட எல்லைகளில் போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story