ஓசூர், தேன்கனிக்கோட்டையில் அருண் ஜெட்லிக்கு பா.ஜ.க.வினர் அஞ்சலி


ஓசூர், தேன்கனிக்கோட்டையில் அருண் ஜெட்லிக்கு பா.ஜ.க.வினர் அஞ்சலி
x
தினத்தந்தி 26 Aug 2019 4:45 AM IST (Updated: 26 Aug 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர், தேன்கனிக்கோட்டையில் அருண் ஜெட்லி படத்துக்கு மாலை அணிவித்து பா.ஜ.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

ஓசூர்,

முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி மறைவையொட்டி அவருடைய படத்திற்கு பா.ஜ.க. சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஓசூரில், ராயக்கோட்டை சாலையில் உள்ள அசோகா தூண் அருகே நடந்தது. இந்த நிகழ்ச்சியில், மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அருண் ஜெட்லியின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதில், கட்சி நிர்வாகிகள் சீனிவாசன், முருகன், ராமகிருஷ்ணா, நாகராஜ், சுரேஷ், மஞ்சு, கிஷோர், சத்யகோபால், சரவணன், மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேபோன்று தேன்கனிக்கோட்டையில் பா.ஜ.க. சார்பில் மறைந்த முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் நாராயணன், நகர தலைவர் பார்த்திபன், பொதுச்செயலாளர் வெங்கட்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு அருண் ஜெட்லி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நிர்வாகி சீனிவாசன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் அருண்குமார், கணினி பிரிவு மாநில செயலாளர் புட்டராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், அமைப்புசாரா மாவட்ட செயலாளர் பிரகாஷ், நகர துணைத்தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் சேகர், கோபி, ஸ்ரீராமன்கோதண்டராமன், அருண்குமார், நாகராஜ், ரங்கநாத் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Next Story