பரமக்குடியில் மத்திய அரசின் விவசாயி ரேஷன் கடை திறப்பு; மானியத்துடன் பொருட்கள் வாங்கலாம்


பரமக்குடியில் மத்திய அரசின் விவசாயி ரேஷன் கடை திறப்பு; மானியத்துடன் பொருட்கள் வாங்கலாம்
x
தினத்தந்தி 27 Aug 2019 4:30 AM IST (Updated: 26 Aug 2019 9:26 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் மத்திய அரசின் விவசாயி ரேஷன் கடை திறக்கப்பட்டு உள்ளது. இங்கு மானியத்துடன் பொருட்கள் வாங்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பரமக்குடி,

மத்திய அரசு கிஷான் ரேஷன்ஷாப் என்னும் விவசாயி ரேஷன் கடைகளை நாடு முழுவதும் நிறுவி வருகிறது. இங்கு விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் மானிய விலையில் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெறுவதாகும். இடைத்தரகு எதுவும் இல்லாமல் நேரடி கொள்முதல் மற்றும் நேரடி விற்பனை ஆகும். இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 28 விவசாயி ரேஷன் கடைகளை திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன் ஒருபகுதியாக நேற்று பரமக்குடி நிலா நகரில் விவசாயி ரேஷன் கடையை பரமக்குடி எம்.எல்.ஏ. சதன் பிரபாகர் திறந்து வைத்தார். விழாவில் பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கர், விவசாயி ரேஷன் கடை இயக்குனர் ஜெய்கணேஷ், மாவட்ட உதவி செயல் அலுவலர் கிஷோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் மானியத்துடன் கிடைக்கும்.

அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், மசாலா பொருட்கள், சோப்பு போன்ற அடிப்படை பொருட்களை 10 சதவீதம் முதல் 19 சதவீத மானியத்துடன் அரசு விற்பனை செய்கிறது. இந்த மானியத்தை பெற ஆதார் அட்டை, ஸ்மார்ட் ரேஷன் அட்டை, விவசாய அட்டை என இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து செல்வது அவசியமாகும். ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது. பின்பு இந்தியாவில் எங்கு வேண்டுமாலும் பொருட்களை மானிய விலையில் வாங்கி கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story