கறம்பக்குடியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி திருவோணம் அணியினர் கோப்பையை வென்றனர்


கறம்பக்குடியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி திருவோணம் அணியினர் கோப்பையை வென்றனர்
x
தினத்தந்தி 27 Aug 2019 4:15 AM IST (Updated: 26 Aug 2019 10:40 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் திருவோணம் அணியினர் முதல் பரிசை பெற்று கோப்பையை வென்றனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தென்னக இளைஞர் கால்பந்து கழகத்தினர் சார்பில், மாநில அளவிலான ஏழுபேர் பங்கேற்ற கால்பந்து போட்டி கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலை சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 32 அணியினர் பங்கேற்றனர். இறுதிபோட்டியில் கறம்பக்குடி பல்லவராயர் நினைவு அணியினரும், திருவோணம் அணியினரும் மோதினர். இறுதிப்போட்டியை தென்னக இளைஞர் கால்பந்து கழக கவுரவ தலைவர் விஜயரவி பல்லவராயர் தொடங்கி வைத்தார்.

திருவோணம் அணிக்கு முதல் பரிசு

இதில் திருவோணம் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று ரூ.20ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் சுழற்கோப்பையை வென்றனர். 2-ம் பரிசு கறம்பக்குடி பல்லவராயர் அணியினரும், 3-ம் பரிசை புதுக்கோட்டை அணியினரும், 4-வது பரிசை நரங்கியப்பட்டு அணியினரும் பெற்றனர். மேலும் ஆட்டநாயகன், தொடர்நாயகன், சிறந்த கோல் கீப்பர், அதிக கோல் அடித்தவருக்கான சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. போட்டியை கறம்பக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான கால்பந்தாட்ட ரசிகர்கள் கண்டு களித்தனர்.

Next Story