அம்பேத்கர் சிலை சேதம்: விடுதலை சிறுத்தைகள் - தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி,
வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதனை கண்டித்து நேற்று மன்னார்குடி பஸ்நிலையம் எதிரே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச்செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் திரளான பேர் கலந்து கொண்டனர்.
அதேபோல நீடாமங்கலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் புதியவன் தலைமை தாங்கினார். அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளான பேர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் ரெயில் நிலையம் முன்பாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆரோக்கிய செல்வம் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் இமான் சேகர், மண்டல செயலாளர் பட்டாபிராமன், வக்கீல் அணி செயலாளர் சிவராஜேந்திரன், நகர செயலாளர் பாவா, விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் நிலவன் உள்பட பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், இதை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
அதேபோல அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளர் பிரகாஸ் தலைமையில் திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மறியலை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டியை அடுத்த தண்டலைச்சேரியில் உள்ள பாரதிதாசன் உறுப்புக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பாக வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்பு அனைவரும் அங்கிருந்து கலைந்து வகுப்புக்கு சென்றனர்.
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் தலைமை தாங்கினார். இதில் சங்க மாவட்ட நிர்வாகிகள் சந்தோஷ், சேது, புவனேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story