தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து பி.இ.எம்.எல். தொழிலாளர்கள் தர்ணா போராட்டம்
பி.இ.எம்.எல். தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதை கண்டித்து நேற்று கோலார் தங்கவயலில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோலார் தங்கவயல்,
பெங்களூரு, மைசூரு, கோலார் தங்கவயல் மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு ஆகிய பகுதிகளில் மத்திய அரசுக்கு சொந்தமான பி.இ.எம்.எல். தொழிற்சாலைகள் அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலைகள் மத்திய ராணுவ அமைச்சகத்துக்கு கீழ் இயங்கி வருகிறது. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.இ.எம்.எல். தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதற்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து பி.இ.எம்.எல். தொழிற்சாலைகளின் தொழிற்சங்கங்கள் சார்பில் பெங்களூரு, டெல்லி போன்ற இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக அப்போதைய மத்திய மந்திரிகள் மனோகர் பாரிக்கர், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பி.இ.எம்.எல். தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் மனு கொடுத்தனர். இதன்காரணமாக பி.இ.எம்.எல். தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வந்தது.
இந்த நிலையில், தற்போது கடந்த 2 மாதங்களாக பி.இ.எம்.எல். தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து நேற்று காலை கோலார் தங்கவயல் பி.இ.எம்.எல். தொழிற்சாலையின் முன்பு பி.இ.எம்.இ.ஏ. தொழிற்சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்துக்கு கோலார் தங்கவயல் பி.இ.எம்.இ.ஏ. தொழிற்சங்கத்தின் தலைவர் ஆஞ்சனேயா ரெட்டி தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் ஜெயசீலன், பெங்களூரு தொழிற்சங்க தலைவர் தொம்மலூர் சீனிவாச ரெட்டி, மைசூரு தொழிற்சங்கத்தின் தலைவர் கோவிந்த ரெட்டி மற்றும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினார்கள். முன்னதாக நேற்று காலை 7 மணி முதல் 8.30 மணி வரை பி.இ.எம்.எல். தொழிற்சாலையின் மெயின் கேட் அருகில் வாயிற் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story