மாவட்ட செய்திகள்

அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது + "||" + 26 persons arrested for protesting Ambedkar statue

அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது

அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது
அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து செந்துறையில் ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேர் கைது தா.பழூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்.
செந்துறை,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துறை போலீஸ் நிலையம் அருகே தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஞானமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வீரவளவன் ஆகியோர் தலைமையில் நேற்று திடீரென ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்று கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்த செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 26 பேரை கைது செய்து, அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதே போல் அம்பேத்கர் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்து அரியலூர் மாவட்டம் தா.பழூர் பஸ் நிறுத்தம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். தகவல் அறிந்த தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தரமான சாலை அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. உத்தரபிரதேச போலீசார் கொலையில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே சுட்டுக்கொலை
உத்தரபிரதேசத்தில் 8 போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ரவுடி விகாஸ் துபே நேற்று என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
3. தரங்கம்பாடியில், இன்று சுருக்குமடி, இரட்டைமடி வலை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
தரங்கம்பாடியில், இன்று(வெள்ளிக்கிழமை) சுருக்குமடி, இரட்டைமடி வலை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது என மீனவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. போலீசார் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே கைது: மத்திய பிரதேசத்தில் சிக்கினான்
உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய 8 போலீஸ்காரர்கள் கொலையில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே மத்திய பிரதேசத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டான்.
5. திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது
திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.