மூதாட்டியை தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு


மூதாட்டியை தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 27 Aug 2019 3:45 AM IST (Updated: 27 Aug 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டி தனது சங்கிலியை பிடித்துக்கொண்டதால் சிறிது தூரம் அவரை இழுத்துச்சென்ற அவர்கள், மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர்.

குளித்தலை,

குளித்தலை வைகநல்லூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சவுந்தராஜன் மனைவி சந்திரா (வயது 65). இவர் தினசரி அதிகாலை எழுந்து வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பது வழக்கம். அதுபோல் நேற்று அதிகாலை வாசலில் தண்ணீர் தெளித்துக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் பின்பக்க தலையை பிடித்துக்கொண்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை பறிக்க முயன்றனர். மூதாட்டி தனது சங்கிலியை பிடித்துக்கொண்டதால் சிறிது தூரம் அவரை இழுத்துச்சென்ற அவர்கள், மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதில் மர்மநபர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த சந்திராவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த குளித்தலை போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story