குளித்தலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க கோரி குறை தீர்க்கும் முகாமில் மனு


குளித்தலையில் புதிய பஸ் நிலையம் அமைக்க கோரி குறை தீர்க்கும் முகாமில் மனு
x
தினத்தந்தி 27 Aug 2019 3:30 AM IST (Updated: 27 Aug 2019 1:18 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை நகராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

குளித்தலை,

குளித்தலை நகராட்சியில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. குளித்தலை அறிஞர் அண்ணா சமுதாய மன்றத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு குளித்தலை கோட்டாட்சியர் லியாகத் தலைமை தாங்கி குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 5 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் குளித்தலை தாசில்தார் செந்தில், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) புகழேந்தி, அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் குளித்தலையில் புதிய பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த முகாமில் நேற்று பெறப்பட்ட மொத்த மனுக்களில் பெரும்பான்மையான மனுக்கள் குளித்தலையில் புதிய பஸ் நிலையம் அமைக்கவேண்டும் என்றே வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட 6 முதல் 10 வார்டுகள் வரை நேற்று மனுக்கள் பெறப்படுகின்றன. இன்று (செவ்வாய்க்கிழமை) 11 முதல் 15 வார்டு வரையிலும், நாளை (புதன்கிழமை) 16 முதல் 20 வார்டு வரையிலும், வருகிற 29-ந்தேதி 20 முதல் 24 வார்டுகள் வரையுள்ள பொதுமக்களிடம் இருந்தும் மனுக்கள் பெறப்படவுள்ளன.

Next Story