காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில், ஏரி தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு
காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் ஏரி தூர்வாரும் பணியை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தட்ரஹள்ளி மாதனூர் குட்டூர் ஏரி மற்றும் பசவண்ண ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:- காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் மட்டும் மொத்தம் 72 ஏரிகளும், 41 குளங்களும் உள்ளன. தற்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் வறண்ட நிலையில் உள்ள 9 ஏரிகள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே சமூக பொருளாதார மேம்பாட்டு நிதியின் கீழ் 11 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றுள்ளன. 14 குளங்கள் தூர்வாரும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
குட்டூர் ஏரியை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிதாக கரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. பசவண்ண ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு தற்போது இந்த ஏரிகளில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது என்றார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணபவா, வேடியப்பன், ஒன்றிய பொறியாளர் தமிழ்செல்வி, பணி மேற்பார்வையாளர் சரவணன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story