கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது கணவன்-மனைவி உள்பட 6 பேர் படுகாயம்


கன்டெய்னர் லாரி மீது கார் மோதியது கணவன்-மனைவி உள்பட 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Aug 2019 3:45 AM IST (Updated: 27 Aug 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

புதுக்குடி அருகே கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி உள்பட 6 பேர் காயம் அடைந்தனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி திருச்சி சாலையில் உள்ளது புதுக்குடி. இந்த பகுதியில் பல தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் அடிக்கடி இப்பகுதியில் ராட்சச இரும்பு குழாய்களை ஏற்றி கொண்டு கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு புதுக்குடியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பெரிய கன்டெய்னர் லாரியை டிரைவர் புதுக்குடி- தஞ்சை சாலையில் திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து தஞ்சையை நோக்கி சென்ற கார், கன்டெய்னர் லாரியின் பின்பக்கமாக மோதியது.

விபத்தில் 6 பேர் படுகாயம்

இந்த விபத்தில் காரில் வந்த தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை டி.பி.எஸ் நகரை சேர்ந்த தியாகராஜன் (வயது 70), இவருடைய மனைவி புனிதவதி (63), உறவினர்கள் ராஜேஷ் (9), ராஜேஸ்வரி (37), பாலசுப்ரமணியன் (51) மற்றும் கார் டிரைவர் மோகன்ராஜ் (70) ஆகிய 6 பேரும் படுகாயமடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காரில் சிக்கி கொண்டிருந்தவர்களை மீட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story