மானிய விலையில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் மானிய விலையில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருப்பூர்,
விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் வேளாண்மை எந்திரமயமாக்குதல் திட்டம் தமிழகத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு வழங்குதல் மையங்கள் அமைத்தல் போன்ற பணிகளுக்கு 2019–20–ம் நிதியாண்டில் ரூ.4¼ கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.
விவசாயிகள் உழவன் செயலியில் பதிவு செய்து மத்திய அரசின் இணையதளமான www.agrimachinery.nic.in மூலமாக விண்ணப்பித்து மானியம் பெற்று வருகிறார்கள். விவசாயிகளுக்கு அதிகபட்சமாக டிராக்டர்களுக்கு ரூ.5 லட்சம், நெல் நாற்று நடவு செய்யும் எந்திரங்களுக்கு ரூ.5 லட்சம், வைக்கோல் கட்டும் எந்திரங்களுக்கு ரூ.9 லட்சம், அறுவடை எந்திரங்களுக்கு ரூ.11 லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளது.
பவர் டிரில்லர், விசைக்களையெடுப்பான், புதர் அகற்றும் கருவி, சுழற்கலப்பை, கொத்துக்கலப்பை, விதை விதைக்கும் கருவி, திருப்பும் வசதி கொண்ட ஹைட்ராலிக் வார்ப்பு இறகு கலப்பை, தட்டை வெட்டும் கருவி, நிலக்கடலை தோண்டும் கருவி, பயிர் கதிரடிக்கும் எந்திரம், கரும்பு கட்டை சீவும் கருவி, கரும்பு சோகை துகளாக்கும் கருவி, டிராக்டர் டிரெய்லர், தென்னை ஓலை துகளாக்கும் கருவி ஆகியவற்றுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகை, இதில் எது குறைவோ அந்த தொகை மானியமாக சிறு, குறு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகள், பெண் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மற்ற விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியத்தொகையில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு அதிக விலையுள்ள வேளாண் எந்திரங்களை குறைந்த வாடகைக்கு கிடைக்கும் வகையில் விவசாயிகள், விவசாய சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்புடைய வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற வசதியாக 50 டிராக்டர், 6 பவர்டிரில்லர், 2 வைக்கோல் கட்டும் கருவி, 2 விசை களையெடுப்பான், 7 கொத்துக்கலப்பை, 34 ரோட்டவேட்டர், 2 புதர் அகற்றும் கருவி, 3 தென்னை ஓலை துகளாக்கும் கருவி, 1 டிராக்டர் டிரெய்லர் வாங்கிக்கொள்ள நடப்பு ஆண்டில் ரூ.2 கோடியே 27 லட்சத்து 95 ஆயிரமும், 24 வாடகை மையங்கள் அமைக்க ரூ.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு விவசாயிகள் சம்பந்தப்பட்ட வேளாண் பொறியியல் துறை உபகோட்ட அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Tags :
Next Story