5-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பு: ராமேசுவரம் மீனவர்கள் நாளை ரெயில் மறியலில் ஈடுபட முடிவு


5-வது நாளாக வேலை நிறுத்தம் நீடிப்பு: ராமேசுவரம் மீனவர்கள் நாளை ரெயில் மறியலில் ஈடுபட முடிவு
x
தினத்தந்தி 28 Aug 2019 4:30 AM IST (Updated: 27 Aug 2019 9:29 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் 5-வது நாளாக வேலை நிறுத்தம் செய்துவரும் மீனவர்கள் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

ராமேசுவரம்,

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க வேண்டும், சேதமான படகுகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும், மீனவர்களின் படகுகளை அரசுடைமையாக்கும் அறிவிப்பை இலங்கை அரசு கை விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

மீனவர்கள் பிடித்து வரும் சூடை, காரல் மீன்கள் மீதான ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை ராமேசுவரம் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளுக்காக ராமேசுவரத்தில் கடந்த 23-ந் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 5-வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தம் நீடித்தது. 700-க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப் படகுகள் கடலுக்கு செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தால் கடற்கரை பகுதி முழுவதும் மீனவர்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (வியாழக்கிமை) பிற்பகல் 3 மணியளவில் துறைமுக பகுதியிலிருந்து ஏராளமான மீனவர்கள் ஊர்வலமாக ரெயில்வே நிலையம் நோக்கி புறப்பட்டு மாலை 4 மணிக்கு ராமேசுவரத்திலிருந்து திருப்பதி புறப்பட்டு செல்லும் விரைவு ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Next Story