மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம், அத்திப்பட்டில் சிறப்பு குறைதீர் முகாம் + "||" + Kancheepuram Special Care Camp

காஞ்சீபுரம், அத்திப்பட்டில் சிறப்பு குறைதீர் முகாம்

காஞ்சீபுரம், அத்திப்பட்டில் சிறப்பு குறைதீர் முகாம்
காஞ்சீபுரம், அத்திப்பட்டில் சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது.
காஞ்சீபுரம்,

தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறைத்தீர் முகாம் காஞ்சீபுரம் பெருநகராட்சி ஒலிமுகமதுபேட்டையில் நடைபெற்றது. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், ரேஷன்கார்டு வேண்டி 250-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை கலெக்டர் பொன்னையா பெற்றுக்கொண்டார். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


காஞ்சீபுரம் மாவட்டம் குமிழி கிராமத்தில் நடந்த சிறப்பு குறைதீர் முகாமிற்கு ஊராட்சி செயலாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் திலகம், கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக காட்டாங்குளத்தூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீரப்பாக்கத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த முகாமிற்கு கீரப்பாக்கம் ஊராட்சி செயலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் பரிமளா தேவி, உதவி வேளாண்மை அலுவலர் ஆறுமுகம், கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக காட்டாங்கொளத்தூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் பல்வேறு மனுக்களை அளித்தனர்.

வண்டலூர் ஊராட்சியில் நடந்த சிறப்பு குறை தீர் முகாமிற்கு ஊராட்சி செயலாளர் வீரராகவன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் அமுதா, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக காட்டாங்கெளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் பூமகள்தேவி, கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம் சித்தாமூரில் சிறப்பு குறை தீர் முகாம் செய்யூர் தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாணி ஆகியோர் தலைமையில் நடந்தது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினேஷ் , துணை தாசில்தார் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இலவச வீட்டுமனைபட்டா, சாலை வசதி , பசுமை வீடு , இருப்பிடசான்று , முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் இந்த முகாமில் பெறப்பட்டது.

இதில் கிராம நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

இதே போல் முகுந்தங்கிரி ஊராட்சியிலும் சிறப்பு குறை தீர் முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு வருவாய் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர் முகாம் நடந்தது. இதில் சாலை வசதி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, பல்வேறு சான்றுகள் குறித்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டது. இந்த முகாமிற்கு பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம்பலராமன் தலைமை தாங்கினார்.

பொன்னேரி ஆர்.டி.ஓ. நந்தகுமார் முன்னிலை வகித்தார். தாசில்தார் எட்வர்ட்வில்சன் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமில் அத்திப்பட்டு பகுதி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வடிவேல், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், கலைஞர் நகர் பகுதியில் பொது கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த முகாமில் கூட்டுறவு சங்க இயக்குனர் பொன்னுதுரை, ஒன்றிய கவுன்சிலர் வடிவேல், வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் கீதா, பிரபுசங்கர், ராஜசேகர், ஊராட்சி செயலாளர் பொற்கொடி, மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மோகன்வடிவேல், பிரபாகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
2. காஞ்சீபுரம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு
காஞ்சீபுரம் வருகை தந்த எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
3. காஞ்சீபுரம் அருகே கணவர் பேச மறுத்ததால் இளம்பெண் தற்கொலை; காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே கணவர் பேச மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
4. இன்று காஞ்சீபுரம் வருகை தரும் முதல்-அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு
2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அரசியல் கட்சி தலைவர்கள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆசியுடன் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட வாரியாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
5. காஞ்சீபுரம் அருகே ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான 10 கோடி நிலம் மீட்பு
காஞ்சீபுரம் ஒலிமுகமதுபேட்டை அருகே உள்ள லாலா தோட்டம் பகுதியில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமாக 9 ஏக்கர் இடம் உள்ளது.