திருவள்ளூர் - பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூர் - பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 27 Aug 2019 10:15 PM GMT (Updated: 27 Aug 2019 5:22 PM GMT)

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வேலைவாய்ப்பு, கடனுதவி, வீட்டுமனைப்பட்டா, ரேஷன்கார்டு, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 389 கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் கலெக்டர் நாடாளுமன்ற தேர்தல் 2019 தேர்தல் பணியின்போது பள்ளிப்பட்டு வட்டம் சொரக்காப்பேட்டையை சேர்ந்த தாமோதரன் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்ததற்காக வாரிசுதாரர்களான அவரது பெற்றோருக்கு இறப்பு இழப்பீட்டு தொகை ரூ.15 லட்சத்திற்கான காசோலைகளையும், வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டம் வாயிலாக கணவனால் கைவிடப்பட்டோருக்கான ஓய்வூதியத்திற்கான ஆணையையும் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புனிதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பார்வதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story