பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க. - கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டியில் தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்கள், விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் நிலத்தடி நீர் சேகரிப்பிற்கு ஊராட்சிகளில் வெட்டப்படும் குளங்களின் பணிகளை குளங்களை உபயோகிப்பவர்கள் குழுவிற்கு வழங்காமல், மற்றவர்களுக்கு வழங்குவதை கண்டித்தும், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வலியுறுத்தியும் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றின் சார்பில் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
கோஷங்கள்
ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ராமகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி பாஸ்கர், முன்னாள் ஒன்றிய செயலாளர் முகில்ராஜேந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இளையராஜா, முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்விராஜா, விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் கதிரேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முருகானந்தம், ஜோதிபாசு உள்பட பலர் கலந்து கொண்டனர். பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story