ஊத்துக்குளி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது


ஊத்துக்குளி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 28 Aug 2019 4:45 AM IST (Updated: 28 Aug 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயம்,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் மணிமுத்து (வயது 32). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார்.

இந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டதால், மணிமுத்துவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது.

மேலும் கள்ளக்காதலனை எப்பொழுதும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக கள்ளக்காதலனை தனது வீட்டிற்கே அழைத்து சென்று தங்க வைத்துக்கொண்டார். அங்கு இருவரும் கணவன்-மனைவி போல் குடும்பம் நடத்தி வந்த நிலையில், மணிமுத்து, அந்த பெண்ணின் மகளான 17 வயது சிறுமியிடம் தனது கைவரிசையை காட்டி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனே அந்த சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அந்த சிறுமி 2 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சிறுமியின் தாயார், விசாரித்தபோது, மணிமுத்து தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி உள்ளார். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரித்து மணிமுத்து மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட மணிமுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story