ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் 9 பேர் கைது


ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் 9 பேர் கைது
x
தினத்தந்தி 28 Aug 2019 4:00 AM IST (Updated: 28 Aug 2019 12:47 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அண்மையில் உடைக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஜெயங்கொண்டம்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே பகுஜன் சமாஜ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலுக்கு கட்சியின் அரியலூர் மாவட்ட மண்டல செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நீலமேகம், மாவட்ட தலைவர் சின்னதுரை உள்பட மொத்தம் 9 பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story