கார் மீது மினி லாரி மோதியதில், பெங்களூரு தொழில் அதிபர் உள்பட 8 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே கார் மீது மினி லாரி மோதியதில் பெங்களூரு தொழில் அதிபர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேடசந்தூர்,
பெங்களூருவை சேர்ந்த தொழில் அதிபர் பாண்டுரெங்க பிரபு (வயது 55). இவரும், அதே ஊரை சேர்ந்த கிரான் (35) என்பவரும் சேர்ந்து தொழில் சம்பந்தமாக நெல்லைக்கு சென்று விட்டு மீண்டும் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். காரை பெங்களூருவை சேர்ந்த அருண்குமார் (33) என்பவர் ஓட்டி வந்தார்.
அவர்கள் திண்டுக்கல்-கரூர் 4 வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பிரிவு என்னுமிடத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது நாகம்பட்டியில் இருந்து பழனி சென்ற மினி லாரி 4 வழிச்சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு திரும்பியபோது, கார் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து முன்பகுதி பலத்த சேதமடைந்தது. மினி லாரியின் முன்பக்க சக்கரங்கள் இரண்டும் தனியாக கழன்று சாலையில் கிடந்தது.
இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்தில் படுகாயமடைந்த தொழில் அதிபர் பாண்டுரெங்க பிரபு, கிரான், டிரைவர் அருண்குமார் ஆகியோரை போலீசார் மீட்டு சிகிச்சைக் காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் மினி லாரி டிரைவரான பழனியை சேர்ந்த மாரிமுத்து (25), அந்த லாரியில் வந்த தொழிலாளர்கள் செல்வராஜ் (40), கருப்புச்சாமி (42), ஈஸ்வரன் (40), மாரிமுத்து (40) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வேடசந்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story