லாலாபேட்டை அருகே அரசு பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
லாலாபேட்டை அருகே அரசு பஸ் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
லாலாபேட்டை,
கரூர் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு பஞ்சப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் இரவு 9.45 மணி அளவில் லாலாபேட்டையை அடுத்த பஞ்சப்பட்டி அருகே முத்தம்பட்டி என்ற இடத்தில் வந்தபோது, திடீரென்று டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சல்போட்டனர். அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
10 பேர் படுகாயம்
இந்த விபத்தில் கரூரைச் சேர்ந்த மோகன் குமார் (வயது 37), புதுப்பாளையத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் (46) சுக்காம்பட்டியை சேர்ந்த ராமாயி (50), ஆனந்தவல்லி (62), கரட்டுப்பட்டியை சேர்ந்த மேனகா (23), சந்திரசேகர் (38), பஞ்சப்பட்டியை சேர்ந்த மருதாயி (70), குளித்தலையை சேர்ந்த முத்துசாமி (57) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து லாலாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story