மாவட்ட செய்திகள்

மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க தேவைப்பட்டால் கர்நாடக சட்டசபை கூட்டப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி + "||" + Rain and flood damage The Karnataka Assembly will convene Interview with Chief-Minister Yeddyurappa

மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க தேவைப்பட்டால் கர்நாடக சட்டசபை கூட்டப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி

மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க தேவைப்பட்டால் கர்நாடக சட்டசபை கூட்டப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா பேட்டி
மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க, தேவைப்பட்டால் கர்நாடக சட்டசபை கூட்டப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா மலைமனே கிராமத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிக்கமகளூருவுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மலைமனே கிராமத்திற்கு சென்று அங்கு மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எடியூரப்பா ஆறுதல் கூறினார்.


அவருடன் மந்திரி சி.டி.ரவி, எம்.எல்.ஏ.குமாரசாமி, ஷோபா எம்.பி., மாவட்ட பா.ஜனதா தலைவர் ஜீவராஜ், கலெக்டர் பாகதி கவுதம், போலீஸ் சூப்பிரண்டு ஹரீஷ் பாண்டே ஆகியோரும் சென்றனர். ஆய்வு பணிகளை முடித்ததும் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-

மூடிகெரே தாலுகாவில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பு வேறு எந்த தாலுகாவிலும் ஏற்படவில்லை. இந்த தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் புதிதாக வீடு கட்டி தரப்படும். அதுவரை வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு அரசு சார்பில் மாதந்தோறும் வாடகை பணமும் கொடுக்கப்படும். மூடிகெரேயில் ஏற்பட்டு உள்ள சேதம் குறித்து அறிக்கை தயார் செய்து என்னை சந்திக்க வரும்படி கலெக்டரிடம் கூறி உள்ளேன்.

கர்நாடகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க கர்நாடக சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார். இதுகுறித்து விவாதிக்க தேவைப்பட்டால் கர்நாடக சட்டசபை கூட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறையை மந்திரிகள் ஏற்க விரும்பாதது பற்றி எடியூரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், நான் அங்கு மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வந்து உள்ளேன். வேறு எதுவும் என்னிடம் பேச வேண்டாம் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் தொடர்மழை காரணமாக ஓடை, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முத்தூர், நத்தக்காடையூர் பகுதிகளில் தொடர் மழை காரணமாக அந்த பகுதியில் உள்ள ஓடை, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
2. ஊட்டி அருகே மழை காரணமாக, தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன - டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
ஊட்டி அருகே மழை காரணமாக ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. டிரைவரின் சாமர்த்தியத்தால்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
3. மாவட்டம் முழுவதும் பலத்த மழை; விவசாய பணிகள் முழுவீச்சில் தொடங்கின
மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்துள்ளது. இதன் காரணமாக விவசாய பணிகள் முழுவீச்சில் தொடங்கி உள்ளது.
4. வீட்டிலேயே குப்பைகளை உரமாக்கும் திட்டம்: மாணவர்களுக்கு சைக்கிள் பரிசு
திருச்சி மாநகராட்சி பகுதியில் மழைநீர் சேகரிப்பு, குப்பைகளை உரமாக்கும் திட்டத்தை வீட்டில் செயல்படுத்திய மாணவர்களுக்கு சைக்கிளை பரிசாக அதிகாரிகள் வழங்கினர்.
5. கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழை: அருவிகளில் வெள்ளப்பெருக்கு; அணைகளில் நீர்மட்டம் உயர்வு
கொடைக்கானலில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.