தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் - நல்லசாமி கோரிக்கை
தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்று நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்திய தயாரிப்பு மதுபானங்கள், அயல்நாட்டு மதுபானங்களுக்கும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. கள் ஒன்றும் விஷம் அல்ல. அதே நேரத்தில் டாஸ்மாக் மதுபானம் தேவாமிர்தமும் அல்ல. கள் இறக்குவதற்கும், பருகுவதற்கும் அரசியல் அமைப்பு சட்டம் தடை விதிக்கவில்லை.
ஆகவே கள்ளுக்கான தடை அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது. கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் தொடர்வது தமிழ்நாட்டு மக்கள் கொண்டிருக்கும் அறியாமையின் வெளிப்பாடே ஆகும். தமிழ்நாட்டில் உள்ள இடதுசாரி, வலதுசாரி, தேசிய கட்சி, மாநிலக்கட்சி என்று பாகுபாடு இல்லாமல் கள்ளுக்கான தடையை எதிர்த்து போராடாமல் இருப்பது உள்நோக்கம் கொண்டது. இதை கள் இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக எப்படி மக்கள் ஒன்றிணைந்து போராடினார்களோ, அதைப்போல தமிழ்நாட்டின் மென்பானமான கள்ளுக்கு விதித்திருக்கக்கூடிய தடைக்கு எதிராக போராட்டம் உருவாகும். இவற்றை உணர்ந்து கள்ளுக்கான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story