படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் கடலில் மூழ்கினார்
அலையின் சீற்றத்தில் தவறி கடலுக்குள் விழுந்து மூழ்கிய மீனவரை தீவிரமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பாகூர்,
தவளக்குப்பம் அருகே நல்லவாடு தில்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் வல்லவராஜ் (வயது 29), மீனவர். இவர் நேற்று முன்தினம் காலை அதே பகுதியை சேர்ந்த நடராஜன் (36), விஜி ஆகியோருடன் கடலில் மீன்பிடிக்க படகில் சென்றனர்.
நடுக்கடலில் மீன் பிடித்துவிட்டு இரவில் 3 பேரும் கரை திரும்பிக்கொண்டு இருந்தனர். அப்போது படகு என்ஜின் பகுதியில் வல்லவராஜ் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அலையின் சீற்றம் அதிகமானது. இதில் நிலை தடுமாறிய வல்லவராஜ் கடலுக்குள் விழுந்தார். உடனே நடராஜன், விஜி ஆகியோர் கடலில் குதித்து நீச்சலடித்தபடி அவரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் கரைக்கு திரும்பினர். அங்கிருந்த கிராம மக்களிடம் வல்லவராஜ் கடலில் விழுந்தது பற்றி தெரிவித்தனர்.
உடனே 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்றனர். அவர்கள் வல்லவராஜை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களுடன் கடலோர காவல்படையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
படகில் இருந்து தவறி விழுந்த வல்லவராஜ் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Related Tags :
Next Story