குடியை மறக்க சாப்பாட்டில் மாத்திரையை கலந்து கொடுத்ததால் ஆத்திரம்: முதல் மனைவியை குத்திக்கொலை செய்த இறைச்சிக்கடைக்காரர் கைது
குடியை மறக்க சாப்பாட்டில் மாத்திரை கலந்து கொடுத்த ஆத்திரத்தில் முதல் மனைவியை குத்திக்கொலை செய்த இறைச்சிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினரையும் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காலேஜ் ரோடு மரக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ரமேசின் இறைச்சிக்கடைக்குள் சாந்தி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் ரமேஷ் தனது மனைவி சாந்தியை கல்லால் தாக்கி, கத்தியால் தலையில் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் 2-வது மனைவி திலகவதியையும் அவர் தாக்கியதில் அவர் படுகாயத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து ரமேஷ் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
திலகவதியை 2-வது திருமணம் செய்ததில் இருந்து ரமேசுக்கு, திலகவதியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்துள்ளது. ரமேசுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதால் அடிக்கடி மனைவிகள் 2 பேரிடமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். திலகவதி மாத சீட்டு நடத்தி வந்துள்ளார். இதனால் செல்போனில் அடிக்கடி அவர் பேசியுள்ளார். இது ரமேசுக்கு பிடிக்கவில்லை. இதனால் கடந்த 26-ந் தேதி இரவு திலகவதி, சாந்தி ஆகியோருடன் இறைச்சிக்கடைக்கு ரமேஷ் வந்துள்ளார்.
செல்போனில் அடிக்கடி யாருடன் பேசுகிறாய்? என்று கேட்டு திலகவதியின் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு கடைக்குள் வைத்து அவரை கற்களால் அடித்து சித்ரவதை செய்துள்ளார். பின்னர் நேற்று முன்தினம் பகல் முழுவதும் திலகவதியை சித்ரவதை செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சாந்தி தனது கணவர் ரமேசை தடுத்தும் தொடர்ந்து திலகவதியை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
ஒரு கட்டத்தில் தனக்கு மது குடிக்கும் பழக்கத்தை கைவிட மாத்திரையை சாப்பாட்டில் வைத்து கொடுத்தது யார்? என்று ரமேஷ் கேட்டுள்ளார். திலகவதியை துன்புறுத்துவதை தாங்க முடியாத சாந்தி, மருந்தை தான் கொடுத்ததாக ரமேசிடம் கூறியுள்ளார். குடிபோதையில் இருந்த ரமேஷ், அங்கிருந்த கத்தியால் சாந்தியின் தலையில் குத்தியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
அப்போது அங்கு வந்த ரமேசின் மகன், மகளிடம் இதை யாரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தின் போது ரமேசின் உறவினரான காங்கேயத்தை சேர்ந்த குமரேசனும்(25) உடன் இருந்துள்ளார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய திலகவதியை அங்கிருந்து காரில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் குமரேசன் சேர்த்து விட்டு தப்பினார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். பின்னர் ரமேஷ் கொடுத்த தகவலின் பேரில் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த குமரேசனை போலீசார் நேற்று கைது செய்தனர். திலகவதி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story