மாதவரம் அருகே சூதாட்ட கிளப்பில் ஊழியர் தற்கொலை


மாதவரம் அருகே சூதாட்ட கிளப்பில் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 29 Aug 2019 4:00 AM IST (Updated: 29 Aug 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

மாதவரம் அருகே சூதாட்ட கிளப்பில் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

சென்னை மாதவரம் ரெட்டேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கிளப் ஒன்று உள்ளது. இங்கு அனுமதி பெற்று சூதாட்டம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதி மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து பலர் இங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இங்கு சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 34-வது தெருவை சேர்ந்த சண்முகம் (வயது 65) அறைகளை சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் சூதாட்ட கிளப்பில் உள்ள அறைகளை சுத்தம் செய்த அவர், அங்குள்ள அறை ஒன்றின் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு, அங்குள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சகஊழியர்கள், அறையின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அதில் சண்முகம் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாதவரம் போலீசார், அறை கதவை உடைத்து உள்ளே புகுந்து தூக்கில் தொங்கிய சண்முகம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Next Story