50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
50 சதவீத மானியத்தில் வேளாண் கருவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறி உள்ளார்.
தஞ்சாவூர்,
விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்யவும், விவசாயிகளின் நிகர லாபத்தை உயர்த்தவும் வேளாண்ம எந்திரமயமாக்கல் திட்டம் தமிழக அரசின் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் 2019-2020-ல் தஞ்சை மாவட்டத்துக்கு தனிப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்க மானியமாக ரூ.8 கோடியே 52 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண்மை எந்திரங்கள் வாடகை மையம் ஏற்படுத்த ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தை உழவன் செயலியில் பதிவு செய்து தொடர்ந்து மத்திய அரசின் www.agrimachinery.nic,in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து மானியத்தை பெறலாம்.
மானியம்
இந்த திட்டத்தின் கீழ் டிராக்டர், நெல் நடவு எந்திரம், வைக்கோல் கட்டும் எந்திரம், பவர் டில்லர், களை எடுக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி, கொத்துக்கலப்பை, சூழல் கலப்பை மற்றும் தென்னை மட்டைகளை தூளாக்கும் கருவிகள், சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பெண் விவசாயிகளுக்கு 56 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்திலும் அல்லது அரசால் நிர்ணயிக்கப்பட்ட, அதிகபட்ச மானியமும், வேளாண்மை எந்திரங்கள் வாடகை மையம் அமைக்க தனிப்பட்ட விவசாயிகள் அல்லது விவசாய குழுக்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரையிலும், மானியமும் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதே போல் அறுவடை செய்த விளை பொருட்களை புதிய தொழில்நுட்பத்துடன் உலர்த்தி சந்தைப்படுத்துவதற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்மை பொறியியல் துறை மூலம் சூரிய கூடார உலர்த்தி 50 சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது. இந்த கூடாரம் அமைப்பதால் காற்று, மழை போன்ற இயற்கை இடர்பாடுகளில் பொருட்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது.
பயன்பெறலாம்
400 சதுர அடி முதல் 1000 சதுர அடி வரை சூரிய கூடார உலர்த்தி அமைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை செலவாகிறது. அதில் சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பெண் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ரூ.3.50 லட்சம் வரையிலும் மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் தஞ்சை கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் ரவீந்திரனையும், கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் அய்யப்பனையும், பட்டுக்கோட்டை கோட்டத்தை சேர்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் எழிலனையும் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story